search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வடகிழக்கு பருவமழை தீவிரம்"

    தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் பரவலாக மழை, ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. #NortheastMonsoon #Rain
    சென்னை:

    தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை நேற்று தொடங்கியது. இது அடுத்த 24 மணி நேரத்தில் படிப்படியாக தமிழகம் மற்றும் கேரளாவின் இதர பகுதிகளுக்கு பரவி மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்தது.

    சென்னையில் 4 நாட்களாக மழை பெய்ததால் இதமான குளிர் நிலவுகிறது. இந்த மழையால் நிலத்தடி நீர் மட்டமும் ஓரளவுக்கு உயர்ந்து இருக்கிறது. இன்று சென்னையில் மழை இல்லை. வெயில் தலை காட்டியது.

    அதே சமயம் கடலோர மாவட்டங்களிலும் தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும் மழை நீடிக்கிறது.

    தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கையையொட்டியுள்ள பகுதியில் காற்றழுத்த பகுதி நீடிக்கிறது. தென் தமிழகத்திலும் அதனை யொட்டியுள்ள பகுதியிலும் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனையொட்டியுள்ள கடலோர கர்நாடகாவில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    இதனால் வடகிழக்கு பருவமழை தமிழ்நாடு மற்றும் கேரளா, தெற்கு உள் கர்நாடகா, ஆந்திராவின் ராயலசீமா பகுதிகளிலும் தொடங்கி உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.



    தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் பரவலாக மழை பெய்யும், ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    4-ந்தேதி முதல் 6-ந்தேதி வரை அடுத்து வரும் 3 நாட்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை ஏதும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #NortheastMonsoon #Rain

    ×